இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக உயர்ந்தது.
பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு மேட்டூர் அணைக்கு வரும் நீரை விட அதிகமாக இருக்கும் நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியிலிருந்து 72.77 அடியாக குறைந்தது. மேலும் அணை காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடியும் திறக்கப்படுகிறது.