“யுஜிசி நெட்”.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 5-ந்தேதி கடைசி நாள்

கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜூன் மாதத்திற்கான “யுஜிசி நெட்” தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை , அக்டோபர் 6 முதல் 11 வரை நெட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆகும். கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி சார்ந்த தேர்வு முதல் ஷிப்டில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 2 வது ஷிப்ட் அடிப்படையில் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். மேலும் தகவலுக்கு, ugcnet.nta.nic.in, www.nta.ac.in என்ற இணையதளத்தில் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!