ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 24,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 57,07,452 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 734 பேர் இறந்தனர், இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் 40 ஆயிரம் 775 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில், நோய்த்தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 21,336 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 51,43,255 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 4,23,422 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.