ரஷ்யாவில் கடந்த 24(காலை நிலவரப்படி) மணி நேரத்தில் புதிதாக 20,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 54 லட்சத்தைக் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மேலும் 601 பேர் இறந்துள்ளனர், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் 32 ஆயிரம் 064 ஆக உள்ளது. 49.29 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 3.47 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யா நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.