கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யா தற்போது 5 வது இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்யாவில் புதிதாக 21,650 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,72,941 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 611 பேர் இறந்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் 33 ஆயிரம் 893 ஆக உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 49,69,340 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 3,69,708 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.