ரூ.10 கோடி செலுத்திய சசிகலா… சிறையில் இருந்து விடுதலை எப்போது?

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை முடிவடைய உள்ள நிலையில், நீதிமன்றம் விதித்த ரூ.10 .10 கோடி அபராதத் தொகையை சசிகலா செலுத்தினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்தது.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் 4 ஆண்டு தண்டனைக் காலம் முடிவடையும் நிலையில், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவர் என்று சில மாதங்களாகவே தகவல்கள் கசிந்தன.

ஆனால், முழு தண்டனை காலம் முடிந்து அடுத்தாண்டு ஜனவரி 27 அல்லது 28ம் தேதி சசிகலா விடுதலையாவார் என சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவருடைய தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமார், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் செலுத்தி இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற பதிவாளரிடம் இரண்டு வங்கி வரைவோலைகள் (டிராப்ட்) மூலமாக செலுத்தப்பட்டு அதனை நீதிபதி சிவப்பா ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிகிறது. எனவே, ஜனவரி மாதத்தில் சசிகலா விடுதலை உறுதியாகியுள்ளது; அதற்கு முன்பே அவர் விடுதலை ஆவாரா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!