ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை பதுக்குவோர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய  மக்கள் கூட  தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும்  பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு   கட்டுப்பட்டுஊரடங்கு  எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில்சில சமூக விரோதிகள் ரெம்டிசிவர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர்  விற்பது தொடர்பான   குற்றச்சாட்டுகளும் வருவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பேரிடர்  காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாழும்  ஒவ்வொருவரின்  உயிரின்  மீதும் அக்கறை  கொண்டு தனது தலைமையிலான  அரசு செயல்பட்டு   வரும்   நிலையில்,   அதற்கு   மாறாக, ரெம்டிசிவர் மருந்துகளை  பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை  உயர்த்தி   விற்பனை  செய்வோர் மீதும் குண்டர்  சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!