ரெம்டெசிவர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் மருந்துகள் பெற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் நேற்று கொரோனா தடுப்புக் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நோயாளிகளின் உறவினர்கள் ரெம்டெசிவர் மருந்துகள் பெற சிரமப்படுவதை போக்க கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவர் மருந்துகள் நாளை முதல் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெம்டெசிவர் மருந்துகள் தேவைப்படுவோர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுகலாம்.
15.05.2021 முதல் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துகள் நாளை இன்று முதல் வழங்கப்படமாட்டாது. எனவே பொதுமக்கள் யாரும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு ரெம்டெசிவர் மருந்துகளை வாங்க வரவேண்டாம் என சென்னை நகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்.