தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவையை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் அதற்கென தனி இணையதளம் முகவரியை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. ரெம்டெசிவிர் தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.