ரேசன்கடையில் கைரேகை இயந்திரத்தால் கொரோனா நோய் பரவும் அபாயம்…!

மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ரேசன் கடையும் உண்டு.. இந்த ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு,சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவைகளை வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு மக்கள் வருகிறார்கள்..

அவர்கள் கார்டுகளை ஸ்கேன் செய்த உடன் அவர்கள் கைரேகையை (BIOMETRIC) மெஷினில் பதிவு செய்ய வேண்டும்.. அனைவரும் ஒரே (பயோமெட்ரிக்) மெஷினில் கைரேகையை உபயோகிக்கிறார்கள்.. இதனால் நோய் தொற்றும் அபாயம் இருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மாற்று வழி இருக்கிறதா என்று பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகமாக கொரோனா நோய் பரவும் இந்த நேரத்தில் நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் ரேஷன் கடைக்கு வரும் மக்களின் பணிவான வேண்டுகோள்.

Translate »
error: Content is protected !!