லாரி உரிமையாளர்கள் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திற்கு ஈகோ பார்க்காமல் முதலமைச்சரும்,போக்குவரத்து துறை அமைச்சரும் தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டுமெனவும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். 2017 பிறகு சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு உற்பத்தியாளர்களே ஜிபிஎஸ் கருவி பொருத்தி கொடுக்கிறார்கள். அந்த வாகனத்தில் கூடுதல் ஜிபிஎஸ் பொருத்த விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சியில் தென் இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலசங்க கூட்டம் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா தலைமையில் நடைபெற்றது.இதில் தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகப்பா, தமிழக அரசின் சட்டங்களால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனாலேயே இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். நாங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த பின்பு முதலமைச்சரோ,போக்குவரத்து துறை அமைச்சரோ இதுவரையிலும் தங்களை அழைத்து பேசாதது வேதனை அளிக்கிறது. மூன்று மாதங்களில் தேர்தல் வரும் பட்சத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் முதலமைச்சர் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார். 5000 கோடி ரூபாய் போக்குவரத்து மூலம் வருவாய் ஈட்டும் அரசு தங்களை அழைத்து பேசவில்லை.
டீசல் விலையை குறைக்க வேண்டும், மாநில எல்லைகளில் செயல்படும் RTO அலுவலகம் மற்றும் செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதனால் தமிழகத்தில் 4லட்சம் லாரிகள் ஓடாது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் 12லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தடுத்து நிறுத்தப்படும், எனவே தமிழக முதலமைச்சரும் போக்குவரத்துதுறை அமைச்சரும் ஈகோ பார்க்காமக் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பேட்டி : சண்முகப்பா– பொதுச்செயலாளர், தென்இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம்.