வாக்கிங் சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்செயின் பறிப்பு

வாக்கிங் சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர், சுபாஷினி (வயது 54). நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு வழியாக தன் கணவருடன் ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் ஒருவர் சுபாஷினியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக சுபாஷினி செம்பியம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!