வாடகைக்கு மூளை வாங்கி அதிமுகவை தோற்கடிக்கும் முயற்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் என பெரியகுளம் தனித் தொகுதி வேட்பாளரை அறிமுக படுத்தி பிரச்சார துவக்க விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் பேச்சு.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
பிரச்சாரத்தை துவக்கி வைத்து ஒ.பி.ரவீந்திரநாத் பேசுகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக்கொண்டு வாடகைக்கு மூளை வாங்கி அதிமுகவை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும் அதனை பொற்கால ஆட்சி தந்த அம்மா வழியில் தொண்டர்கள் ஒன்றிணைந்து வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
முன்னதாக அதிமுக தொண்டர்கள் பெரியகுளம் தனி தொகுதி வேட்பாளர் முருகனை வரவேற்று சால்வை அணிவித்து மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு செய்தனர்.இதில் பெரிய உள்ளம் ஒன்றிய செயலாளர்கள் அண்ணன் பிரகாஷ் செல்லமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்