‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஐபிஎல் வீரர்கள் .. வைரல் வீடியோ

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றவாத்தி கம்மிங்பாடலுக்கு ஐபிஎல் வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல்வாத்தி கம்மிங்’. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மைதானத்திலேயே வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார் அஸ்வின். அதன்பின் இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் இணைந்து அஸ்வின் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்

இந்நிலையில், தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய 3 பேரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!