சென்னை விருக்கம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார்.
விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மேலும் விஜயகாந்த கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கான முதல்வரிடம் ரூ .10 லட்சம் காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பில் , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி. ஏ.ராசா ஆகியோரும் இருந்தனர். வீட்டிற்கு சென்ற முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.