விஜய் நடிக்கும் “தளபதி 65” படத்தில் புதிய குழப்பம்..!

விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் “தளபதி 65″ படப்பிடிப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 65’ படப்பிடுப்பு ஜார்ஜாவில் முதற்கட்ட படப்பிடுப்பு நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது , ஜார்ஜியாவில் குளிரான தட்பவெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக படப்பிடிப்பு திட்டமிட்டபடி சரியாக நடத்த முடிய வில்லை.. தினமும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் பட குழுவினர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஜார்ஜியாவில் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டுத்தான் படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!