தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு கடந்த திங்கட்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீடுகள் தோறும் சென்று விற்பனை செய்வதற்கு உரிய அனுமதி வழங்கி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத வாறு நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே விவசாய விளைநிலங்களுக்கு விவசாயிகள் சென்று வர தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி வரும் நிலையில் விவசாய விளைபொருட்களை பறிப்பதற்கு விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் விளைந்த காய்கறிகளை வியாபாரிகளிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் விவசாய நிலங்களில் விளைந்த பொருட்களை பறிப்பதற்கு கூலி தொழிலாளிகளை கொண்டு சென்றால் மட்டுமே அத்தியாவசிய தேவை பொருட்களான காய்கறிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் இல்லையென்றால் அத்தியாவசிய தேவை பொருட்களான காய்கறிகள் விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு பொது முடக்க நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறி பொருட்களை விளைநிலங்களில் இருந்து வியாபாரிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.