விற்பனை செய்ய முடியவில்லை.. டன் கணக்கில் கொட்டி வரும் விவசாயிகள்.. !

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அறிவித்து நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் பெரியகுளம் பகுதி முழுவதும் முக்கிய பிரதான விவசாயமாக உள்ளதால் தற்பொழுது மாங்காய்கள் நல்ல விளைச்சல் அடைந்து மகசூல் எடுக்கும் நிலையில் பொது முடக்கம் போடப்பட்டதால் பரித்த மாங்காய்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் டன் கணக்கில் பறிக்கப்பட்ட மாங்காய்கள் அனைத்தும் பழுத்து அழுகி வீணானது.

இந்நிலையில் அழுகிய மாம்பழங்கள் அனைத்தையும் விவசாயிகள் பெரியகுளம் அருகே  .புதுக்கோட்டை பகுதியில் உள்ள புதுக்குளம் கண்மாயில் பத்து டன்னுக்கும் மேலாக பழுத்து அழுகிய மாம்பழங்களை குளத்து  நீரில் கொட்டியதால் நீர் மாசடைவதுடன் குளத்து  நீரை பயன்படுத்தும் நெல் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழுத்து அழுகிய மாம்பழங்களை கொட்டுவதை தடுத்து  நிறுத்த வேண்டும்  என  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!