தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்வட்டார பகுதிகளான வடுகபட்டி, சில்வார்பட்டி, முதலக்கம்பட்டி, காமக்காபட்டி, தேவதானப்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் முன்பு வரை தக்காளி கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை போனதாகவும் தற்போது ஒரு கிலோ தக்காளியின் விலை 8 ரூபாய் முதல் 10 ரூபாய் மட்டுமே விலை கிடைபதால் தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த விலை வீழ்ச்சிக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உரத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், ஆனால் விவசாயிகள் விளைவிக்கும் பெருட்களின் விலை மட்டும் குறைந்து வருவதாகவும் இதனால் தக்காளி பறிக்கும் கூலி ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுல்ளதால் பறித்த தக்காளிபழங்களை விளை நிலத்திலே கொட்டி வருவதாக விவசாயிகள் வேதனை தொரிவிப்பதோடு தமிழக அரசு விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு அடிப்படைவிளையான உற்பத்தி விலை முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.