விளை நிலத்திற்கு பாதை மீட்பு: ஓ.பி.எஸ்.சிற்கு விவசாயிகள் நன்றி

போடி அருகே விளை நிலங்களுக்கு செல்லும் பாதையை மீட்டுக் கொடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அடுத்த சுமார்18 ஏக்கர் நிலப்பரப்பில், மாரிமூர் கம்மாய் ஒட்டி ஒரு நிறுவனத்தை சுற்றிலும் விளை நிலங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் வாழை கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்வதற்கு கொட்டகுடி பெரியாற்று கொம்பை அருகே உள்ள பாதை, பிரதான வழித்தடமாக பயன்படுத்தி வந்தனர். அந்த பாதையை, அப்பகுதியை சேர்ந்த மல்லீஸ்வரர் என்பவர் அடைத்து வைத்துக் கொண்டு, விவசாயிகள் நிலத்திற்கு செல்ல விடாமல் தடுத்து வந்துள்ளார்.

இதனால் கவலையடைந்த விவசாயிகள், பாதையை அடைத்து வைத்த மல்லீஸ்வரருடன் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தினர்; எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து, இந்த பிரச்சனை குறித்து தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கை மனுவை அளித்தனர்.

இன்று அப்பகுதிக்கு சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அடைக்கப்பட்ட பாதையை பார்வையிட்டார். மேலும் இடத்திற்கு சொந்தக்காரரான மல்லீஸ்வரனுட பேசினார். விவசாயிகளோடு சமாதானமாக சென்று நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, துணை முதல்வர் அறிவுறுத்தினார். இதற்கு அவரும் சம்மதித்தார்.

இதையடுத்து, விளை நிலங்களுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்ட விவகாரம், சுமூகமாக முடிவுக்கு வந்தது. பல மாதங்களாக நீடித்து வந்த பிரச்சனையை தீர்த்து வைத்த துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Translate »
error: Content is protected !!