விவசாயிகளுடன் விவாதிக்க அரசு தயார்: இறங்கி வருகிறார் அமைச்சர் அமித்ஷா

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் துறையை சீர்திருத்தம் தொடர்பான 3 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லியை நோக்கி பஞ்சாம் விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளின் பேரணியை கடந்த வியாழக்கிழமை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் காவல்துறையினர் தடுத்தனர். தடையை மீறிய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. விவசாயிகளும் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்ததால், டெல்லிக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேச்சு நடத்த தயார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது; விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வேளாண் அமைச்சருடன், டிசம்பர் 3ம் தேதி பேச்சு நடத்த வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!