வீரப்பன் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஒதுக்கிய ஐந்து கோடி ரூபாயை வழங்கக்கோரி வழக்கு

வீரப்பன் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஒதுக்கிய ஐந்து கோடி ரூபாயை வழங்கக்கோரி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது..

சந்தனமரக் கடத்தல்காரனான வீரப்பனைப் பிடிக்க தமிழககர்நாடக அரசுகள் சார்ப்பில் சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டது.

1993 முதல் 1996 வரை இப்படையினர் தமிழகம்கர்நாடகம் என இரு மாநில எல்லையில் உள்ள காடுகளில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது வீரப்பனது உறவினர்கள், அவருடைய சமூகத்தை சேர்ந்தவர்கள், அவருடைய கூட்டாளிகள், ஆதரவாளர்கள், உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பலரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை  நீண்டநாள் காவலில் வைத்து விசாரணை செய்தனர். கொடுமையான விசாரணை முறைகளில் பலர் உயிரிழந்தனர். பலரை போலீசாரே சுட்டுக் கொன்றனர். இருமாநில போலீசார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 300 க்கும் அதிகமானோர் மனித உரிமை ஆணையத்துக்கு பலசமூக அமைப்பினர் புகார் அனுப்பினர்.

சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியானது. இதையடுத்து, கர்நாடகாவை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம், தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சி.பி.. இயக்குனர் சி.வி.நரசிம்மன் ஆகியோர் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

நீதிபதி சதாசிவா ஆணையம் 190 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில்,  89 பேரிடம் போலீசார் அத்துமீறலில் எடுபட்டுள்ளனர். குற்றமற்ற இவர்களை போலீசார் தேவையில்லாமல் சிறையில் வைத்திருந்தனர், சிலரை சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்பதை விசாரணையின் மூலம் தெரிந்து கொண்டனர்.

இதற்கிடையே 2000 ஆவது ஆண்டு கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது போலீசாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடு வளங்கவேண்டுமே என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்று இரு மாநில அரசுகளும் ஆளுக்கு ஐந்து கோடி ரூபாயை ஒடுக்கியது.

2007 ஆண்டு சதாசிவா ஆணையம் அதிரடிப்படையால் பாதிக்காப்பட்ட 89 பேருக்கு 2.85 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இத் தீர்ப்பின்படி அந்தத் தொகையை இரு மாநில அரசுகளும் பாதிககப்பட்ட மககளுக்கு இழப்பீடு வழங்கின.

அதே நேரம் இரு மாநில அரசுகளும் ஒதுக்கியதில் மீதமுள்ள 7.15 கோடி ரூபாய் பணத்தையும், அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இழப்பீடாக கொடுக்கவேண்டும் என லக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இம்மனு நேற்று (12.3.2021) நீதியரசர் அப்துல்குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. W/P No 6468 of 2021. மனுதாரரின் கேள்விக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென நீதிபதி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இம்மனு மீதான அடுத்த விசாரணை 9.4.2021  அன்று நடக்கும்.

Translate »
error: Content is protected !!