“வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற பெயரில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரம்…எடப்பாடி பழனிசாமி

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5வது கட்டமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து அண்ணா தி.மு..வுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். 4 கட்டங்களாக மாவட்ட வாரியாக சென்று முதலமைச்சர் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறார்.

5வது கட்டமாக நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை துவக்கினார். 2 வது நாளாக நாளை 9–ந்தேதி (நாளை) ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். காலை 10.30 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் தொகுதி கைனூர் கணபதி நகர் பகுதியில் நடைபெறும் மகளிருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 1

1.20 மணி அளவில் சோளிங்கர் தொகுதி பாண்டியநல்லூர் பகுதியில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து 1.05 மணி அளவில் ராணிப்பேட்டை தொகுதி முத்துக்கடையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு. ரவி எம்.எல்.. தலைமையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாலை 4 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணைக்கட்டு தொகுதி கந்தனேரி பகுதியில் நடைபெறும் மகளிருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

5.10 மணி அளவில் கே.வி.குப்பம் தொகுதி சென்ராம்பள்ளி பகுதியில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மண்டல பொறுப்பாளரும் அமைப்பு செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் ஆகியோர் செய்கிறார்கள்.

வேலூர் தொகுதி அண்ணா கலையரங்கத்தில் 6.30 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்கான ஏற்பாட்டை வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மேற்கொள்கிறார்.

3 வது நாளாக நாளை மறுநாள் (10–ந்தேதி) திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். காலை 8.30 மணி அளவில் ஆம்பூர் தொகுதி புறவழிச்சாலையில் நடைபெறும் மகளிருடன் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

வாணியம்பாடி தொகுதி இஸ்லாமிய கல்லூரியில் 9.45 மணி அளவில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

11.20 மணி அளவில் திருப்பத்தூர் தொகுதியில் ஸ்காரெட் ஹர்ட் கல்லூரியில் நடைபெறு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அண்ணா தி.மு..வுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி மேற்கொள்கிறார்.

 

Translate »
error: Content is protected !!