வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு பிரமாண்ட பங்களாவில் குடியேறிய டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு, புளோரிடா மாகாணத்தில் உள்ள, ‘மார்லாகோஎஸ்டேட்டில் உள்ள பிரமாண்ட பங்களாவில் குடியேறினார்.

ஜோ பிடன், அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன், டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். ஜோ பிடன் பதவியேற்பை புறக்கணித்த அவர், புளோரிடா மாகாணம், பாம் பீச் நகரில் உள்ள, மார்– – –- லாகோ எஸ்டேட் பங்களாவிற்கு வந்தார்.

அவர், இங்கு நிரந்தரமாக தங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, நியூயார்க் நகரின், ‘டிரம்ப் டவர்மாளிகை, டிரம்பின் அதிகாரபூர்வ குடியிருப்பாக இருந்தது. அதன் பின், அவர், மார்லாகோ பங்களாவில் அவ்வப்போது தங்கி வந்தார்.

அவரது, ‘குளிர்கால வெள்ளை மாளிகைஎன, அழைக்கப்பட்ட இந்த பங்களாவை, 1985ல், 75 கோடி ரூபாய்க்கு வாங்கி, பொழுதுபோக்கு, ‘கிளப்ஆக மாற்றினார். கிட்டத்தட்ட, 20 ஏக்கர் எஸ்டேட்டில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட பங்களா, 1927ல் கட்டப்பட்டது.

இதில், 128 அறைகள் உள்ளன. கிளப் உறுப்பினர்களுக்காக, 20 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட நடன அரங்கம், ஐந்து டென்னிஸ் அரங்கம், நீச்சல் குளம் ஆகியவை உள்ளன. அட்லான்டிக் கடலை பார்வையிடும் வகையில் உள்ள, இந்த எஸ்டேட் பங்களாவின் தற்போதைய மதிப்பு, 120 கோடி ரூபாய்.

முன்னதாக, அதிபர் பதவி காலம் முடிந்த நிலையில், டொனால்டு டிரம்ப் ஆற்றிய பிரியாவிடை உரையின், ‘வீடியோபதிவை, வெள்ளை மாளிகை வெளியிட்டது.அதில், டிரம்ப் கூறியிருந்த தாவது: அமெரிக்காவின், 45வது அதிபராக, என் கடமையை சிறப்பாக செய்த பெருமையுடன், உங்கள் முன் நிற்கிறேன்.

அமெரிக்காவை வளமான நாடாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், என்னை மக்கள் தேர்வு செய்தனர். அதை செய்து காட்டியுள்ளேன்.அதனால் தான், கொரோனா வைரசால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டாலும், பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை.

அதிபராக பணியாற்றியது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம்; அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. என் ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்தேன். மிகப் பெரிய அளவிலான வரிகளை குறைத்ததால், மக்கள் வளமாக வாழ்ந்தனர்.

எந்த அதிபரும் இதுவரை பெறாத ஆதரவை, நான் பெற்றேன். கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட போது, ஒன்பது மாத காலத்திற்குள் தடுப்பூசி கண்டறியப்பட்டது. சீனா மீது வரி விதிப்பு, எரிசக்தியில் தன்னிறைவு என, பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறோம்.

அமெரிக்காவையும், வெளிநாடுகளில் அமெரிக்கத் தலைமையையும் வலிமைப்படுத்தி இருக்கிறோம். இந்த உலகத்தை நாம் மதிக்க வைத்திருக்கிறோம். இந்த மதிப்பை, அடுத்து வருவோர் இழந்துவிடக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்களில் எந்தவிதமான புதிய போரும், எந்த நாட்டின் மீதும் போர் செய்யாத அதிபர் நான் தான் என்பதில் பெருமைப்படுகிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகள். அமெரிக்காவை வளமான பாதுகாப்பான நாடாக்க, புதிய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற பிரார்த்திப்போம்.

 

Translate »
error: Content is protected !!