வேறுபாடு நிலவுகிறதா… வேட்பாளர் தேர்வில் நடந்த சம்பவம்….. பளிச்சுன்னு பதில் சொன்ன எடப்பாடி…!

சென்னை,

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில் அளித்து இருக்கிறார். வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

2021 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. பாஜகவிற்கு 20, பாமகவிற்கு 23, தேமுதிகவுக்கு (12-18) இடங்கள் ஒதுக்கி மிகப்பெரிய கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓபிஎஸ்இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக நேற்று நிறைய செய்திகள் பரவின.

வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நிறைய இழுபறி நீடிப்பதாக செய்திகள் பரவின. ஓபிஎஸ் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி விரும்பாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்து இருக்கிறார்.

அதில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்து இருக்கும். பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும். வேட்பாளர் பட்டியல் தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது.

வேகமாக பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும். வேட்பாளர் தேர்வில் எந்த விதமான இழுபறியும் நீடிக்கவில்லை. எல்லாம் சுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. ஊடகத்திலும், பத்திரிகையிலும் விறுவிறுப்பாக, பரபரப்பிற்காக செய்தி வருவதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார்கள்.

இப்படி பேச வேண்டியது இல்லை. அதிமுகவில் அப்படி எந்த விதமான இழுபறியும் இல்லை. எல்லா முடிவுகளையும் விரைவில் எடுப்போம். வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை திட்டமிட்டபடி தாமதமின்றி தயாரிக்கப்பட்டு வருகிறது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியின் போது துணை முதல்வர் .பி.எஸ் உடன் இருந்தார் . நேற்று முதல்வர்துணை முதல்வர் இடையே கருத்து வேறுபாடு என்று கூறப்பட்ட நிலையில் வதந்திகள் அனைத்துக்கும் முதல்வர் பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

 

Translate »
error: Content is protected !!