வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் 19 ஆவது நாளாக போராட்டம்

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் 19 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்கள், மக்கள் அதிகாரம், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று முதல் 16ஆம் தேதி வரை தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டத்திற்கு வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் தொடர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!