வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஸ்ரீரங்கம் தொகுதியில் டிராக்டர் பேரணி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட குழுமணியில், உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் அயிலை.சிவசூரியன் தலைமையில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர், டயர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தில் விவசாயிகள் பேரணியாக சென்று மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக குழுமணி எம்ஜிஆர் சிலையிலிருந்து தொடங்கிய இப்பேரணி கோப்பு, அயிலாபேட்டை ஆகிய கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் குழுமணி வந்தடைந்தது.

இப்பேரணியில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களுடைய போராட்டம் பல்வேறு கட்டங்களாக தொடரும் எனவும், ஏற்கனவே விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்து வரும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனம் கையில் விலை நிர்ணயம் சென்றால் இன்னும் விவசாயம் பேரழிவுக்கு செல்லும் எனவும், ஆகையால் உடனடியாக வேளாண் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
Translate »
error: Content is protected !!