ஸ்டாலினின் வேறு முகம்.. அதிரடி காட்டும் திமுக.. வியப்பில் தொண்டர்கள்.!

சென்னை,

திமுக தலைவர் முக ஸ்டாலினின் பிரச்சாரங்கள் கடந்த சில தினங்களாகவே மிகுந்த வரவேற்பையும், அதேசமயம் பல்வேறு யூகங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. இவ்வளவு நாள் ஸ்டாலினும் சரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சரி, ஒரே மாதிரியான தேர்தல் வியூகத்தைதான் கையில் எடுத்து வந்தனர். இருவரும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டனர். இருவரும் ஒரே மாதிரியான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.

இருவரும் ஒரே மாதிரியான அணுகுமுறையிலேயே மக்களை அணுகி வாக்கு கேட்டு வந்தனர். ஆனால், கடந்த 4 நாட்களாகவே ஸ்டாலினின் ஸ்டைல் மற்றும் அவரது பேச்சின் தொனி மாறி இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு 2 உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, கோவையில் வேலுமணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும்போதும், மற்றொன்ற ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும்போதும், ஸ்டாலினின் வேறு முகம் தென்பட்டது என்றே கவனிக்கப்பட்டு வருகிறது.

மற்ற அமைச்சர்களை விமர்சிப்பதைவிட, அமைச்சர் வேலுமணி என்றால் திமுக தலைமை சற்று டென்ஷன் ஆகும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனாலும் ஒரு எல்லையிலேயே அந்த விமர்சனங்கள் இவ்வளவு காலம் இருந்தன. நேற்று முதன்முறையாக ஸ்டாலின் பேசியது திமுக தொண்டர்களுக்கு வியப்பையும், பிரம்மிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

கோவையிலுள்ள 21 தொகுதிகளையும் நான் பார்த்துக்கிறேன்னு வேலுமணி சொல்றார். ஆனால் நாங்க, அவரை அவர் தொகுதியை விட்டு நகரமுடியாத அளவுக்கு செய்துள்ளோம். இது தான்டா திமுக. மிஸ்டர் வேலுமணி, திமுகனான இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள ஜெயிலுக்குள்ள தள்ளுவேன்என்றார்.

அதேபோல, ராஜபாளையத்தில் ஸ்டாலின் பிரசாரம் செய்யும்போது, தன்னுடைய 30 நிமிஷ பேச்சில் 10 நிமிஷம் ராஜேந்திர பாலாஜிக்காகவே ஒதுக்கினார். “ரவுடித்துறை அமைச்சர். பபூன் ரவுடி. அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருது.. நான் எங்க போனாலும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு கேப்பேன். ஆனால் முதன்முதலாக ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு சொல்லி வாக்கு கேக்கறேன்.

ஜெயலலிதா இருந்திருந்தால் இவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருக்க மாட்டார். அதிமுகவிலேயே இருந்திருக்க மாட்டார். ஆட்சிக்கு வந்ததும், அவர் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, உண்மையை வெளிக் கொண்டுவந்து, அவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் முதல் வேலை.! என்றார். இந்த இரு பேச்சுக்களும் தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லையே, அதுக்காக தனிப்பட்ட விரோதம் போல ஸ்டாலின் இப்படி கிழித்து தொங்க விட்டிருப்பது சரியா? இன்னும் ஆட்சிக்கு வரவே இல்லை.

அதுக்குள்ள ஜெயிலுக்கு அனுப்பறத மட்டும் ஸ்டாலின் பேச வேண்டுமா? எல்லாம் இந்த தேர்தல் கணிப்பு தந்த தைரியம்.. இப்படி ஓபனாகவே செக் வைத்தால் எப்படி? என்று ஒருசாரார் கேட்கின்றனர். மறுசாராரோ, ஸ்டாலின் தனக்கு சம்மந்தம் இல்லாதவரை பற்றி பேசவில்லை.. எத்தனையோ அரசியல் விவகாரங்களையும் தாண்டி, தனிப்பட்ட முறையிலேயே மோதியவர்கள் இவர்கள்.. தரக்குறைவான விமர்சனங்களை வைத்தவர் ராஜேந்திர பாலாஜிதான்! “உன்னுடைய மனைவி எல்லா கோயிலுக்கும் போறாங்க.

வீட்டில் நவராத்திரி கொலு நடத்துறாங்க. நீ மட்டும் அடுத்த சாமி கும்பிட போகாதே., திருநீர் வைக்காதேகுங்குமம் வைக்காதே. நாமம் போடாதே என கிண்டலும், கேலியும் பேசுறே. உங்க வீட்டுக்கு புட்டபர்த்தி சாய்பாபா வந்தப்போ, உங்க அம்மா தயாளு அம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கினாங்களே.. அப்படியே மடிப்பிச்சை போல் வாங்கினாங்களே.

பக்கத்தில் கலைஞரும்தான் உட்கார்ந்திருந்தார். துரைமுருகன் அண்ணாச்சி கூட ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டார். என்ன பெரிய நாத்திகம் பேசுகிறீங்க. நீ ஆம்பளையா இருந்தால் என்கூட மோதி பாரு.. நீ எங்கே இருக்கியோ சொல்லு நான் அங்கே வரேன்என்று எல்லைமீறிய பேசிய பேச்சுக்கள் யூடியூப்பிலேயே வைரலாகின.

இந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேசியதற்கு ஸ்டாலின் ஏதாவது பதிலடி தந்தாரா? அதை பற்றி பேசினாரா? அல்லது இவ்வளவு காலம் விமர்சித்தாரா? இப்போதுகூட, அமைச்சரின் ஊழல் வழக்குகளை வழக்கை துரிதப்படுத்தி, உண்மையை வெளிக் கொண்டுவந்து சட்டப்படி தண்டனை வாங்கி தர்றேன்னு சொல்றது எப்படி பழிவாங்கல் நடவடிக்கையாகும்? பேசணும்னு எதை வேண்டுமானாலும்..” என்று மறுசாரார் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். இப்படி ஸ்டாலினின் பேச்சுக்கள் இருவேறு கருத்துக்களை களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

Translate »
error: Content is protected !!