மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் நீர்வரத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருகிறது. இதன் விளைவால் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வரத்தைக் காட்டிலும் வெளியேற்றம் குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 99 புள்ளி 80 அடியாக உள்ள அணையின் நீர் மட்டம், இன்று காலை 11 மணியளவில் 100 அடியை எட்டும் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 512 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 111 கன அடியாக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!