சென்னை காவல் ஆளிநர்களுக்கு திரவ சுத்திகரிப்பான்கள், முகப்பாதுகாப்பு கேடயம் அடங்கிய 6 அடுக்கு கொரோனா பாதுகாப்பு கவசங்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

சென்னைநகர காவல்துறை சார்பாக கொரோனா தொற்றுத்தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை காவல்  அதிகாரிகள், ஆளிநர்கள் உள்பட மொத்தம் 23 ஆயிரம் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்புக் கவசங்கள்
வழங்கி வருகின்றனர். ஒரு நபருக்கு தலா 3 முகக்கவசங்கள், 5 திரவ சுத்திகரிப்பான் பாட்டில்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு கேடயம் வழங்கி வரப்படுகிறது. இதன் முதல் கட்ட நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

சென்னை மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு இந்த கொரோனா தடுப்புக்கவசங்களை கமிஷனர் வழங்கினார். சென்னை நகர மேற்கு மண்டல காவல் ஆளிநர்கள் சார்பாக அம்பத்தூர் துணைக்கமிஷனர் தீபா சத்யன் பெற்றுக் கொண்டார். அதே போல கிழக்கு மண்டலம் சார்பாக அயனாவரம் உதவிக்கமிஷனர் சீனிவாசனுக்கு கொரோனா கவசங்கள் வழங்கப்பட்டது. மேலும் எஸ்ஐக்கள், காவல் ஆளிநர்களுக்கும் முகக்கவசங்கள் அடங்கிய தொகுப்புகளை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை நகர கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், தலைமையிட இணைக்கமிஷனர் மல்லிகா மற்றும் நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர்கள் விமலா, ஸ்ரீதர்பாபு, மத்தியகுற்றப்பிரிவு துணைக்கமிஷனர் நாகஜோதி, நிர்வாகப்பிரிவு துணைக்கமிஷனர் பெரோஷ்கான் அப்துல்லா உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!