கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பிறந்த நாளை கொண்டாடிய 117 வயது மூதாட்டி

பாரீஸ்,

உலகின் இரண்டாவது மிக முதிர்ந்த வயதுடையவரான 117 வயது மூதாட்டி சிஸ்டர் ஆண்ட்ரே, கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக முதியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் சிலர் மன உறுதியுடன் கொரோனாவை எதிர்த்து போராடி மீண்டு வந்தது மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. அந்தவகையில் பிரான்ஸை சேர்ந்த உலகின் இரண்டாவது மிக முதிர்ந்த வயதுடையவரான 117 வயது மூதாட்டி சிஸ்டர் ஆண்ட்ரே என்ற மூதாட்டி, கொரோனாவில் இருந்து மீண்டு வந்து தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. தனக்கு மரணம் குறித்து பயம் இல்லாததால், கொரோனா வந்த பிறகும் பயம் இல்லாமல் இருந்ததாக மூதாட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் குறைவான நபர்களை வைத்து மட்டுமே அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!