12 மணி நேரம் காலணிகள் அணிந்தால் மாதம் 33 ஆயிரம் சம்பளமா!

இருந்த இடத்திலிருந்தே 12 மணி நேரம் காலணிகளை அணிந்து இருப்பதற்கு, இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று ரூ. 4 லட்சம் சம்பளமாக அறிவித்துள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் வெளியில் சென்று கடினமாக உழைக்க கூடிய எண்ணத்தை விட வீட்டிலிருந்தபடியே ஏதாவது உழைக்கலாம் என யோசிப்பவர்கள் பலர் இருப்பார்கள். அப்படி யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் ஒரு விளம்பரம் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

ஏனென்றால் அமர்ந்த இடத்திலிருந்தே ஒரு மாதத்திற்கு சுமார் 33 ஆயிரம் ரூபாய் வரையிலும் சம்பாதிக்க முடியுமாம். இங்கிலாந்தை சேர்ந்த பெட்ரூம் அத்லெடிக்ஸ் எனும் நிறுவனம் காலணி சோதனையாளர் எனும் வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படிஅவர்கள் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட கூடிய காலணிகள் பலவற்றையும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் போட்டு இருக்க வேண்டும். மாதத்தில் 2 முறை மட்டும், அவர்கள் அணிந்திருந்த காலணிகள் குறித்த தங்கள் அனுபவங்களை நிறுவனத்திற்கு சொன்னால் போதுமாம்.

இதுதான் இந்த காலணி சோதனையாளரின் வேலை. இந்த வேலைக்காக ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படும். இந்த வேலையை செய்ய விரும்பினால் அவர்களது இணையதளத்தில் சுய விவரங்களை நிரப்பும் பொழுது நிறுவனத்தின் சார்பில் பதில் கிடைத்ததும் நீங்கள் வேலையை துவங்கலாம்.

காலணிகள் அனைத்தும் பணியாளர்களுக்கு இலவசம். இப்பொழுது இந்த காலணி சோதனையாளர் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்திற்கு காலணி சோதனையாளர் பணிக்காக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!