15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் மீது போக்சோ

சென்னை கே.கே. நகர் பகுதியில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை, கேகே நகர் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 12ம் தேதியன்று சிறுமியின் தாயார் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 23) என்ற வாலிபர் கடத்திச்சென்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வாலிபர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!