16ம் தேதி நடைபெற இருக்கும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முகூர்த்தகால் நட்டார்

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் வருகிற 16ம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை யொட்டி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:

வருகிற 16-ம் தேதி நடைபெற விருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டு தலின்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் .பன்னீர்செல்வமும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு விழாவை தொடக்கி வைக்கிறார்கள்.

இந்த ஆண்டும் வழக்கம் போல சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் ஒரு காரும் சிறந்த காளைக்கு துணை முதல்வர் சார்பில் ஒரு காரும் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை வழங்க முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும் என்றார்.

மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். மேலும் அம்மாவின் அரசுபொங்கல் பரிசு தொகுப்பு அடுத்த ஆண்டும் மக்கள் ஆதரவோடு எடப்பாடி இதே போன்று வழங்குவார்கள் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகுராஜா, வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார், வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார், துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் சின்னச்சாமி பாண்டியன், தேவி, வட்டார வளர்ச்சிஅலுவலர் பிரேம ராஜன், சுகாதார பணிகளின் துணை இயக்குனர் அர்ஜுன் குமார், வட்டார மருத்துவர் அலுவலர் வளர்மதி, மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் சுந்தர்ராஜ், பாலாஜி, சுந்தரராகவன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!