18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார சேவைகள் இயக்குநரகம்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பும் 1 லட்சத்திற்கு குறைந்து வருகிறது. தற்போது 2வது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டு நெறிமுறைல், 5 வயது மாற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் மாஸ்க் அணிய அவசியம் இல்லை என பரிந்துரைத்துள்ளது. 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம்.

18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச் ஆர் சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!