தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு.. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு..!

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் .பெரியசாமி பங்கேற்று மாவட்டத்தில் நடைபெற்று கொரோனா பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன்  ஆய்வு நடத்தினார் இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான .பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

கூட்ட தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன்னுண்ணி கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி அவர்களிடம் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலவரங்களை அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பற்றியும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அதன்பின் போடி கம்பம் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை பற்றி கேட்டறிந்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த .பெரியசாமி அவர்கள் கூறியது:-

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தொடர்ச்சியாக எடுத்து வந்த சீரிய முயற்சியால் 30 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு 20 சதவீதமாக குறைந்துள்ளது.  மேலும் இந்த பாதிப்புகளை குறைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில்  கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டால்  கிராமமாக இருந்தாலும் சரி நகர்ப்புறமாக இருந்தாலும் சரி  அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை முன்னேற்பாடுக செய்து வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. மருத்துவ படுக்கைகள் போதிய அளவு உள்ளதுஇந்த ஊரடங்கில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவையான பொருட்களை வீடு தேடி சென்று வழங்குவதற்காக  தேனி மாவட்டத்தில் 400 வண்டிகளுக்கு மேல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த ஊரடங்கை முனைப்போடு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா நோய்த் தொற்றின் மற்றொரு பாதிப்பான கரும்பூஞ்சை நோய் தேனி மாவட்டத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. அதற்கான மருந்துகளும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருப்பு பூசைக்கான மருந்து நாளை தேனி மருத்துவக் கல்லூரிக்கு வர உள்ளது கருப்பு பூஞ்சை போன்ற நோய்கள் ஏற்படும்போது தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்னேரமும் எப்பொழுதும் கொரோனா  தடுப்பு பணிகளில் ஈடுபட மருத்துவ வசதிகளோடு தயார் நிலையில் தேனி மாவட்டம் இருக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்தொற்று பசோதனை செய்வதற்கு ஆர்டிபிஸியா பரிசோதனை எடுக்கபடுகிறது. இந்த பரிசோதனை மூலம் துள்ளிதமான நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறிய படுவார்கள். தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு பரிசோதனை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.தமிழக அரசு மாவட்டந்தோறும் ஆக்ஜிசன் உற்பத்தி நிலையங்களைத் திறப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Translate »
error: Content is protected !!