ஒரே நாளில் வெளியாக போகிறதா ஆர்யாவின் 2 படங்கள்..?

இருமுகன் படத்தை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர் இயக்கும் படம் “எனிமி”. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படபிடுப்பு முடிந்து பின்னனி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வரும் அக்டோபர் 14ஆம் தேதி பூஜை அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் “அரண்மனை 3”. இந்நிலையில் இந்த படமும் அக்டோபர் 14ஆம் தேதி அன்று ரிலீசாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!