தமிழகம் முழுவதும் இன்று 20 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில், இன்று( சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் 20 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

Translate »
error: Content is protected !!