25,368 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்ட 25,368 சமூக வலைதள கணக்குகள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்டறிந்து மத்திய அரசு முடக்கியுள்ளதா? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு குறைபாடு ஏற்படும் வகையில் செயல்படும் சமூக வலைதள கணக்குகள் (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் கூகுள் URL பக்கம்) ஆகியவை மத்திய அரசால் முடக்கப்பட்டு வருகிறது.

அதன் படிப்படையில் 2014-2021 வரை நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டதாக கருதப்பட்ட 25,368 சமூக வலைதள கணக்குகள் மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் முடக்கப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நெருக்கடியான 2020 மற்றும் 2021 ஆண்டுகளிலே  அதிக அளவில் போலியான கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!