3 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை… உங்கள் மாவட்டத்தில் மழை பெய்யுமா?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத்தாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!