3 மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் தீவிர பிரச்சாரம்

சென்னை,

6வது கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 நாள் பிரச்சாரத்தை நாளை தொடங்குகிறார்.

வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து அண்ணா தி.மு..வுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு வந்து அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட வாரியாக சென்று முதலமைச்சர் இடைவிடாது பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி தற்போது 6-வது கட்டமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறர்.

நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காலை 11 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து 12 மணி அளவில் திருச்செந்தூரில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.. செய்து வருகிறார்.

பிற்பகல் 1.40 மணி அளவில் ஒட்டப்பிடாரம் தொகுதி மாப்பிள்ளையூரணியி்ல் இளைஞர் பாசறைஇளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் சி.ராஜூ செய்து வருகிறார். தூத்துக்குடியில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

18–ந்தேதி மற்றும் 19–ந்தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருநெல்வேலி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட மண்டலப் பொறுப்பாளராக ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இருக்கிறார். இதேபோல தென்காசி வடக்கு மாவட்ட மண்டலப் பொறுப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் சி.ராஜூ உள்ளார்.

18–ந்தேதி காலை 10 மணி அளவில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதனை தொடர்ந்து 11.40 மணி அளவில் நாங்குனேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்களுடன் கலந்துரைடுகிறார்.

பகல் 1.05 மணி அளவில் தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் இளைஞர் பாசறைஇளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை என். கணேசராஜா செய்து வருகிறார்.

மாலை 4 மணிக்கு ஆலங்குளம் தொகுதியில் இளைஞர் பாசறைஇளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், 5.10 மணிக்கு தென்காசி தொகுதி பாவூர்சத்திரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

மாலை 6.30 மணிக்கு தென்காசி இசக்கி மஹாலில் மகளிர் குழுவுடன் எடப்பாடி கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.. செய்து வருகிறார்.

19-ந் தேதி காலை 10 மணி அளவில் கடையநல்லூர் பள்ளிவாசல் அருகே பொதுக்கூட்டத்தி்ல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். 11.30 மணி அளவில் வாசுதேவ நல்லூரில் மகளிர் குழுவுடன் கலந்துரையாடல் மற்றும் 12.15 மணி அளவில் சங்கரன்கோவிலில் இளைஞர் பாசறைஇளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணமுரளி செய்து வருகிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள இடங்களில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Translate »
error: Content is protected !!