தமிழகத்தில் 3 அமைச்சர்களின் துறை நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தொழில்துறை வசமிருந்த சர்க்கரை ஆலையின் நிர்வாகப் பிரிவு விவசாய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (அதன்படி, சர்க்கரை ஆலைத் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்து வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வசம் மாற்றம்)
போக்குவரத்து துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையத்தின் நிர்வாகம், தொழில் துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (இதன்படி, விமான போக்குவரத்து துறை, அமைச்சர் ஆர். எஸ். இராஜ கண்ணப்பனிடம் இருந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றம்)
தொழிலாளர் நலத்துறையின் பொறுப்பில் இருந்த வெளிநாட்டு மனித வள கழக நிர்வாகம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.