30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருவில்லிபுத்தூர் கண்மாய்….250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருவில்லிபுத்தூர் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்து நிறைந்துள்ளது. இதனால் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரைப் பயன்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கடந்த மாதம் பரவலான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அடிவாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் கண்மாய் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அந்தவகையில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை நிரம்பியது இதை தொடர்ந்து விவசாயிகள் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீர் பொதுவாக வத்திராயிருப்பு மற்றும் அதிகபட்சமாக சுந்தரபாண்டியம் வரை சுமார் 20 கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்புவது வழக்கம் ஆனால் இந்த முறை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கண்மாய் குளங்கள் நிரம்பி உள்ளன

பிளவக்கல் அணையில் திறக்கப்பட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட உடனேயே உடனேயே அனைத்து கண்மாய் மற்றும் குளங்களுக்கும் தண்ணீர் இந்த முறை செல்ல வேண்டும் என அதிகாரிகள் முடிவு செய்தனர். அனைத்து பகுதி விவசாயிகளும் அந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் அந்தப் பகுதியில் நீர் ஆதாரங்களை பெருக்கிக் கொள்ளவும் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் சிவகாசி சப்கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் தாசில்தார் சரவணன் மற்றும் செயற்பொறியாளர் ராஜா உதவி செயற்பொறியாளர் சந்திரமோகன் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய ஆகியோர் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனடிப்படையில் திட்டமிட்டு அனைத்துக் கண்மாய் களுக்கும் தண்ணீர் வர வழிவகை செய்யும் வகையில் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முட்புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு ஒவ்வொரு கண்மாய்க்கு கொள்ளளவு எவ்வளவு அந்த கண்மாயை நம்பி எவ்வளவு விவசாயப் பாசனங்கள் உள்ளன என்பதை கணக்கீடு செய்து அந்த அளவின்படி அனைத்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் அனைத்துக் கண்மாய்களுக்கும் முதல்முறையாக குறைந்தது 40 கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வந்து உள்ளது. இதனால் அந்தந்த பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பானாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது.

இதுகுறித்து பானாங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பையா வயசு அம்பது என்பவர் கூறும்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தண்ணீர் வந்துள்ளது எப்போதுமே தண்ணீர் வராததால் நாங்கள் இந்த பகுதியில் விவசாயம் செய்வதே நிறுத்தி விட்டோம். தற்போது தண்ணீர் வந்துள்ளதால் வறண்டு போய் இருந்த எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதில் விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

தொடர்ந்து பானா குளம் கண்மாய் உட்பட பல்வேறு கண்மாய்களுக்கும் இப்போதுதான் தண்ணீர் வந்துள்ளது. இது நீண்ட மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து கண்மாய் களுக்கும் தண்ணீர் வந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!