கெய்ரோ,
எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டு வந்த 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ், நாட்டின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இந்த மிகப் பழமையான நகரத்தை கண்டுபிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நகரம், ஏதெனின் எழுச்சி என்றும் அறியப்படுகிறது. இந்த நகரத்தை மூன்றாம் அமென்ஹோடெப் மற்றும் மன்னர் துதன்கமுன் ஆகியோரது ஆண்டுள்ளனர்.. ஏற்கனவே, ஹேரெம்ஹேப் மற்றும் ஆயி கோயில்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து துதன்கமுன் கோயிலும் இங்கு அமைந்திருக்க வேண்டும் என்ற கணிப்பில், ஏராளமான வெளிநாட்டுக் குழுக்கள் இந்தக் கோயிலை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டன. ஆனால், அப்போதெல்லாம் இந்த நகரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.