பழனியில் காணிக்கையாக 4 கோடி ரூபாய் வசூல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, காணிக்கையாக 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 17 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கை கடந்த இரு தினங்கள் எண்ணப்பட்டது. இதில் கோயிலுக்கு காணிக்கையாக நான்கு கோடியே 33 இலட்சத்து 56 ஆயிரத்து 610 ரூபாயை பக்தர்கள் செலுத்தியிருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு, வெள்ளியால் ஆன காவடி, வீடு, தொட்டில், வேல், கொலுசு, போன்றவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதுதவிர வெளிநாட்டு கரன்சிகள் பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளும் செலுத்தப்பட்டுள்ளன

Translate »
error: Content is protected !!