கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 25 நபர்களுக்கும், காரைக்காலில் 13 நபர்களுக்கும், ஏனாமில் 5 நபர்களுக்கும், மாஹேவில் 6 நபர்களுக்கும் என மொத்தம் 49 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் புதுச்சேரி ஒருவர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1872 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 318 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாநிலத்தில் இதுவரை 1,26,604 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,28,794 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அறிவித்துள்ளது.