சிலி நாட்டின் சுரங்க நகர் பகுதியான கோபியாப்போவில் இருந்து வடமேற்கே 112 கி.மீ. தொலைவில் கடற்கரையோர பகுதியில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.