50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்காக 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது என்றும், தமிழகத்தில் தினசரி 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 578 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த மருத்துவமனைகள் அனைத்தும் மொத்த படுக்கைகளில் 50 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், அவசரம் இல்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளாக அனுமதிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!