ஜப்பானில் இன்று அதிகாலை 1.08 மணியளவில் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் மியாசாகி, ஒய்டா, கொச்சி, குமமோட்டோ ஆகிய பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒய்டா மாகாணத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மியாஜகி மாகாணத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.