600 பணியாளர்கள் 27 மாடிகள் … ரூ.7.500 கோடி மதிப்பு …. அம்பானி வீட்டில் அப்படி என்ன இருக்கு.?

ஆசியாவின் நம்பர் ஒன்பணக்காரர்என்ற இடத்தை மீண்டும் பிடித்த ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி..

மொத்தம் 27 தளங்கள் அன்டிலியா பங்களாவில் மொத்தம் 27 தளங்கள் உள்ளது என்றாலும் ஒவ்வொரு கூரையின் உயரமும் கூடுதலாக உள்ளது. இதன்காரணமாக அன்டிலியா பங்களாவில் 60 மாடி கட்டடம் போல் மிக உயரமாக காட்சியளிக்கிறது.

தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா பங்களா. இதில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கு தளம், 168 கார்கள் கேரேஜ், பால்ரூம், 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் இருக்கிறது. மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கு தளம் தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா பங்களா. இதில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கு தளம், 168 கார்கள் கேரேஜ், பால்ரூம், 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் இருக்கிறது.

அதோடு அன்டிலியா பங்களாவில் மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, சுகாதார மையம் மற்றும் ஒரு கோயில் உள்ளது. மேலும் இதில் ஒரு பனி அறை இருக்கிறது. இந்த அறையின் சுவர்களில் இருந்து உண்மையான பணி விழும்.

24×7 என்ற அடிப்படையில் பணியாற்றும் 600 ஊழியர்கள் தங்குவதற்கான இடவசதி இருக்கிறது. சூரியன் மற்றும் தாமரை வடிவமைப்புகள் போன்று இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் இந்த பங்களா 8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தை தாங்கும். அன்டிலியா பங்களா கட்டுமான பணிகள் 2006-ல் தொடங்கப்பட்டன. 2012-ல் முகேஷ் அம்பானி குடும்பத்தாரோடு இதில் குடியேறினார். இதில் 24 மணிநேரமும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள், பணியாளர்கள் ஷிஃப்ட் முறையில் இருக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!